/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தையின் மூச்சுக்குழாயில் நிலக்கடலை அகற்றிய வேலம்மாள் மருத்துவமனை டாக்டர்கள்

ADDED : ஜூலை 25, 2024 04:43 AM
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையின் காது,மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு வயது பெண் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலையை அகற்றினர்.
டாக்டர் ராஜவேல், குழந்தைகள் நல டாக்டர் ஜெயபாலாஜி கூறியதாவது:
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை ஒரு மாதத்திற்கும் மேலாக மூச்சு விட சிரமப்படுவதாகவும் மூச்சு விடும் போது சத்தம் வருவதாகவும் பெற்றோர் தெரிவித்தனர். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் இடது நுரையீரலில் அந்நியப்பொருள் இருப்பதால் காற்று நுழைவது குறைந்தது உறுதி செய்யப்பட்டது.
பொது மயக்க மருந்துகளின் கீழ் அவசர மூச்சுக்குழாய் சிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் டாக்டர் நிதின் ராகவ், மயக்கவியல் நிபுணர்கள் மணிகண்டன் போஸ், ஜான் சாந்த வினோதன், பூர்ணிமா உதவியுடன் மூச்சுக்குழாய் மட்டத்தில் இருந்த நிலக்கடலை அகற்றப்பட்டது.
ஒரு வயது குழந்தைக்கு 'ப்ரோன்கோஸ்கோபி' செய்வதே கடினம். செயல்முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் துல்லியமான முறையில் அந்நியப்பொருள் அகற்றப்பட்டதும் குழந்தை சீரானது என்றனர்.