ADDED : ஆக 07, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூரில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்கள் பெரிதும் அச்சத்துடன் நடமாடுகின்றனர்.
இப்பகுதியில் நடமாடும் நாய்களில் ஒரு சில வெறி பிடித்து வருவோர், போவோரை கடித்து விடுகிறது. பஸ் ஸ்டாண்டிற்குள் நாய்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். டூவீலரில் செல்வோரை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். கூட்டம், கூட்டமாக ரோட்டில் நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதால் வாகன ஓட்டிகள் சிலர் காயமடைந்துள்ளனர். அவற்றை விலகிச் செல்லவும் வழியில்லை. பல்வேறு பகுதிகளில் நாய்கள் நடமாடி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
எனவே அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.