/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தானம் அறக்கட்டளை பாரம்பரிய நடை பயணம்
/
தானம் அறக்கட்டளை பாரம்பரிய நடை பயணம்
ADDED : டிச 09, 2024 05:29 AM
திருப்பரங்குன்றம்: மதுரை தானம் அறக்கட்டளை, மாநில சுற்றுலாத் துறை, டிராவல்ஸ் கிளப், இன் டேக், தென்மதுரை வட்டார களஞ்சியம் சார்பில் நிலையூர் கிராமம் ஆதி மிளகி அய்யனார் கோயில் வளாகத்தில் பாரம்பரிய நடை பயணம் நடந்தது.
நிலையூரில் பண்டைய காலம் முதல் செயல்படும் நெசவுத் தொழில் குறித்தும், பாண்டியர்கள் இப்பகுதியில் ஏற்படுத்திய நீர்நிலைகள், பாசன வசதிகள் குறித்தும் நடை பயண குழுவிற்கு விளக்கப்பட்டது. நிலையூர் பகுதி குறித்த கையேடு, பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.
மதுரை காமராஜ் பல்கலை கலை பண்பாட்டுத் துறை முன்னாள் பேராசிரியர் சேதுராமன், தொல்லியல் ஆராய்ச்சி நிபுணர் வேதாச்சலம், தென்மதுரை வட்டாரக் களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த், களஞ்சிய மகளிர் 60 பேர் உட்பட கிரகம் பெல் டிராவல்ஸ் கிளப் அலுவலர், பேராசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். திட்ட மேலாளர் முனிராம் சிங், மூத்த திட்ட நிர்வாகி கார்த்திகேயன் ஒருங்கிணைத்தனர்.