/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுற்றுலா தலங்களில் 'கிறுக்காதீங்க'
/
சுற்றுலா தலங்களில் 'கிறுக்காதீங்க'
ADDED : ஜூலை 11, 2024 05:32 AM
மதுரை: ''சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் போது பழமையான சுவர், துாண், பாறைகளில் கிறுக்கி வைத்து அதன் பாரம்பரிய பெருமையை கெடுக்கக்கூடாது'' என மதுரை காமராஜ் பல்கலை சுற்றுலாத்துறைத் தலைவர் ஜார்ஜ் தெரிவித்தார்.
மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் துாய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் முன்னிலை வகித்தார். துறைத்தலைவர் ஜார்ஜ் பேசுகையில், ''வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலா பயணிகளை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். மதுரை மட்டுமல்ல எங்கு சுற்றுலா சென்றாலும் அதை பழமை, பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். நமது பெயர்களை எழுதியும், கிறுக்கியும் அதன் பெருமையை கெடுக்கக் கூடாது. சுற்றுலாத்துறை படிப்பை முடித்தவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன'' என்றார்.
காந்தி மியூசிய செயலர் நந்தாராவ், அரசு மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன், உதவி சுற்றுலா அலுவலர் முனியப்பன் பங்கேற்றனர். மதுரை காமராஜ் பல்கலை மாணவர்கள் வளாகத் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.