/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பள்ளிச் சீருடை தயாரிக்கும் பணியை 'கட்' செய்திடாதீங்க; கூட்டுறவு மகளிர் சங்கங்கள் எதிர்ப்பு

ADDED : மே 29, 2024 04:46 AM
மதுரை : பள்ளிச் சீருடை தயாரிக்கும் பணியை தங்களிடம் இருந்து பறிக்க கூடாது என்று வலியுறுத்தி மதுரை மாவட்ட கூட்டுறவு தையல் அனைத்து சங்கத்தினர் கலெக்டர் சங்கீதாவிடம் வலியுறுத்தினர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சமூகநலத்துறை மூலம் இலவச சீருடை வழங்கப்படுகிறது. இதனை தயாரித்து வழங்கும் பணி மகளிர் கூட்டுறவு அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
மதுரையில் பல மகளிர் கூட்டுறவு தையல் அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு தையல் பணியை தனியார் அமைப்புகளிடம் வழங்கக்கூடாது என நேற்று கலெக்டர் சங்கீதாவிடம் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர்.
நிர்வாகிகள் செல்வி, தாமரைச்செல்வி, சோபியா, ஈஸ்வரி, தீபாலட்சுமி உள்ளிட்டோர் கூறியதாவது: பள்ளிச் சீருடை தயாரிக்கும் பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளோம். மாநில அளவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அளவு எடுத்து, செயலியில் பதிவேற்றி, சீருடை தைக்க தயார் நிலையில் உள்ளோம். இப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் எங்கள் பொருளாதார நிலை கேள்விக்குறியாகும் என்றனர்.
ராணிமங்கம்மாள் தையல் கூட்டுறவு சங்க நிர்வாகி சரண்யா கூறுகையில், ''மாவட்டத்தில் பலஆயிரம் பேர் இப்பணியில் ஈடுபட்டுஉள்ளோம். ஆறுமாதம்தான் எங்களுக்கு வேலை இருக்கும். இப்பணியை சில மாவட்டங்களில் தனியாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதுபோல இங்கும் வழங்க உள்ளனர். பணியை துவக்க இதுவரை துணிகள் தரவில்லை. இந்த வேலை பறிபோனால் வாழ்வாதாரம் பாதிக்கும்'' என்றார்.