ADDED : மே 04, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சோழவந்தான் நெடுங்குளம் நெல் கொள்முதல் மையத்தில் நெல்லை விற்ற விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை என தினமலர் நாளிதழில் மே 1ல் செய்தி வெளியானது.
70 விவசாயிகள் 12 ஆயிரம் டன் அளவு நெல்லை எடையிட்டு விற்ற நிலையில் ஏப். 2 முதல் பணம் பட்டுவாடா செய்யவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்தனர். செய்தி வெளியான நிலையில் நேற்றும், முன்தினமும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நெல்லுக்குரிய பணம் வரவு வைக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.