/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் டாக்டர் 'ஆப்சென்ட்' ; நகர் நல அலுவலர் 'அட்டென்ட்'
/
குன்றத்தில் டாக்டர் 'ஆப்சென்ட்' ; நகர் நல அலுவலர் 'அட்டென்ட்'
குன்றத்தில் டாக்டர் 'ஆப்சென்ட்' ; நகர் நல அலுவலர் 'அட்டென்ட்'
குன்றத்தில் டாக்டர் 'ஆப்சென்ட்' ; நகர் நல அலுவலர் 'அட்டென்ட்'
ADDED : ஆக 31, 2024 05:37 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் நகர்புற நலவாழ்வு மையத்தில் டாக்டர் வராததால் மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் வினோத்குமார் சிகிச்சை அளித்தார்.
நேற்று காலை 10:00 மணிக்கு நகர் நல அலுவலர் ஆய்வுக்கு வந்தார். பணியில் இருக்க வேண்டிய டாக்டர் பூபேஷ் காலை 10:00 மணிவரை வரவில்லை. வெள்ளிக்கிழமை தோறும் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுவதால் நேற்று காலை 8:30 மணியிலிருந்து கர்ப்பிணிகள் மற்றும் புற நோயாளிகள் காத்திருப்பதை பார்த்த வினோத்குமார் பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.
பின்னர் வேறு ஒரு டாக்டரை வரவழைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துவிட்டு புறப்பட்டார். டாக்டர் பூபேஷிற்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது.
இவர் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் விசிட் செய்தபோது 'ஆப்சென்ட்' ஆனதால் திருப்பரங்குன்றத்திற்கு இடமாற்றப்பட்டார்.
10 மாதங்களுக்கு முன் நகர் நல அலுவலர் விசிட் செய்தபோது அன்றும் பூபேஷ் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தார்.