/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா
/
டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா
ADDED : ஜூன் 09, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் அருகே தென்கரையில் பழம்பெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா ஜூன் 15, 16ல் நடக்கிறது.
அவரது பேரன் ராஜேஷ் கூறியதாவது: மகாலிங்கம் 1940களில் தமிழ் திரைத்துறையில் நடிகர்,பாடகர், தயாரிப்பாளர்,இசையமைப்பாளர் என உச்சத்தில் இருந்தார்.1924 ஜூன் 16ல் தென்கரையில் பிறந்தவர். இவரது நுாற்றாண்டு விழா தென்கரையில் கொண்டாடப்பட உள்ளது.
புகைப்படங்கள், விருதுகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. சிலை திறக்கப்படும்.
இதில் திரைத்துறையினர் பங்கேற்கின்றனர். கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்றார்.