/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 23, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் போதைப் பொருள் இல்லா தமிழகம் எனும் தலைப்பில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள் மூலம் நாட்டுப்புறக் கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர்.
கலால் மாவட்ட உதவி கமிஷனர் ராஜகுரு, தெற்கு கோட்ட அலுவலர் சீனிவாசன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன், போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அபிஷேக், போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின், இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, நந்தகுமார், பூர்ணகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.