ADDED : ஏப் 27, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகரித்துகாணப்படுகிறது. இதனால்உடல் சூட்டை குறைக்கும்வகையில் இளநீர், மோர் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிகளவில்பருகி வருகின்றனர். தற்போது பேரையூர் பகுதிகளில் நுங்கு விற்பனை அதிகரித்துஉள்ளது.
நுங்கு வியாபாரிகள் ஒரு நுங்கு பத்து ரூபாய் என விற்பனை செய்கின்றனர். கோடை தொடங்கிய நிலையில் உடலுக்கு குளிர்ச்சியான நுங்கு சீசனும் துவங்கியுள்ளதால் பொதுமக்கள்ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ஆடி மாதம் வரை நுங்கு சீசன் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

