ADDED : பிப் 25, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நிலையூர் கால்வாயை கடந்து வைகை ஆற்றுக்கு செல்ல கிராமமக்கள் சிரமப்பட்டனர்.
சித்திரை, வைகாசி விழாக்களின் போது அதிக மக்கள் கால்வாய் கடந்து ஆற்றுக்கு சென்று வருவார்கள் என்பதால் இங்கு பாலம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்தது.
இதைதொடர்ந்து ரூ.30 லட்சத்தில் புதிய பாலத்திற்கான பூமி பூஜை எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் நடந்தது.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன்,பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிவேல், ஒன்றிய பி.டி.ஓ.,க்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர்.

