ADDED : ஜூலை 17, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை விராட்டிபத்து ஓம் சாதனா சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜ் படத்திற்கு தாளாளர் கண்ணன், இயக்குநர் ரிதனி, முதல்வர் சுபாஷினி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாறுவேடம், கட்டுரை, பேச்சு, ஓவியம், புதிர் போட்டி, குறுக்கெழுத்துப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
