/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதியவர் உடல் அடக்கம் அதிகாரிகள் மனிதாபிமானம்
/
முதியவர் உடல் அடக்கம் அதிகாரிகள் மனிதாபிமானம்
ADDED : மே 09, 2024 05:44 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே பஸ் ஸ்டாப்பில் விஷம் குடித்து இறந்து கிடந்த முதியவரின் உடலை பெற உறவினர்கள் வராத நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து அடக்கம் செய்தனர்.
கள்ளிக்குடி வீரப்பெருமாள்புரத்தை சேர்ந்த அழகர்சாமி 72; விவாகரத்து ஆனவர். உறவினர்கள் பார்த்துக் கொள்ளாத நிலையில் அரசின் உதவி தொகையை பெற்று வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலம் விருதுநகர் ரோட்டில் சமத்துவபுரம் பஸ் ஸ்டாப்பில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இவருடன் பிறந்த இரண்டு சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அழகர்சாமியின் உடலை பெற்று அடக்கம் செய்வதற்கு முன்வரவில்லை.
இதனால் பிணவறையிலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று மேலக்கோட்டை வி.ஏ.ஓ., ரமேஷ், தலையாரி பாலகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் திருமங்கலம் தாலுகா போலீசார் இணைந்து அழகர்சாமியின் உடலை திருமங்கலம் சுடுகாட்டில் புதைத்தனர்.