ADDED : செப் 24, 2026 02:03 AM
மதுரை: மதுரைக் கோட்ட எல்.ஐ.சி., ஊழியர் சங்கத்தின் 70வது ஆண்டு மாநாடு மதுரையில் நடந்தது. தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தென்மண்டல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். துணை மேயர் நாகராஜன் வரவேற்றார். எம்.பி., வெங்கடேசன், பொன்னையா, லெனின், அருண்குமார், மரிய லூயிஸ், மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எல்.ஐ.சி.,யில் மூன்றாம், நான்காம் பிரிவு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மத்திய அரசு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சங்க அங்கீகாரம், கூட்டு பேர உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பாலிசிதாரர் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பொதுச்செயலாளர் ரமேஷ்கண்ணன் நன்றி கூறினார்.
