ADDED : ஜூலை 26, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
அலங்காநல்லுார், ஜூலை 27- மதுரை யாதவா கல்லுாரியில் நிர்மான் பவுண்டேஷன், யாதவர் கல்லுாரி இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் ராஜு முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் விவேக் வரவேற்றார். பவுண்டேஷன் திட்ட மேலாளர் பாலமுருகன் துவக்கி வைத்தார். இம்முகாமில் 59 முன்னணி நிறுவனங்களை சேர்ந்த 104 மனிதவள நிர்வாகிகள் பங்கேற்று நேர்முக தேர்வு நடத்தினர். 500க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
