/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மையம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு மையம்
ADDED : செப் 18, 2024 04:05 AM
மதுரை, : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையம் துவக்கப்பட உள்ளது.
அரசின் மாவட்ட மறுவாழ்வுத்துறையின் கீழ் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்கனவே இதுபோன்ற ஒரு மையம் சில மாதங்களுக்கு முன்பு வரை செயல்பட்டது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு அது முடங்கியது. அதே இடத்தில் மீண்டும் ஒரு மையம் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுடன் துவக்கப்பட்டுள்ளது. டி.வி.எஸ்., நிறுவனத்தின் ஆரோக்கியா மற்றும் ரீஆக்ட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு, பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தை துவக்கி உள்ளன. இதற்கென 2 அலுவலர்களையும் நியமித்துள்ளனர்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவது, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளை அளிப்பது, போட்டித்தேர்வுகள் உட்பட தேவையான ஆலோசனைகளை வழங்குவது இதன்பணி.