ADDED : ஆக 22, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற வாழ்வாதார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த முறையில் நியமிக்க தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைmadurai.nic.inஎன்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். ஐந்து சமுதாய அமைப்பாளர் காலியிடங்களுக்கு வரும் ஆக.30ல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் அவசியம். கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் (எம்.எஸ்.ஆபீஸ்) பெற்றிருக்க வேண்டும்.
மதுரையை சேர்ந்தவராக, தகவல் தொடர்பியல்திறன் பெற்றிருப்பது, மகளிர் திட்டம் போன்ற அனுபவம் ஓராண்டாவது பெற்றிருப்பதும் அவசியம். இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் அவசியம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நகர வாழ்வாதார மையங்கள், மக்கள் கற்றல் மையம் அலுவலகத்தில் ஆக.30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.