ADDED : ஆக 31, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தொழிற்சாலைகள் தொடர்பு அமைப்பு சார்பில் உலக தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். டீன் சங்கரநாராயணன் வரவேற்றார். மதுரை ைஹடெக் அராய்டு துணை பொதுமேலாளர் துரைராஜ் பேசினார்.
சக்தி சணல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் சின்னஅக்கம்மாளுக்கு விருது வழங்கப்பட்டது. மாணவி குருகாவியா தொகுத்து வழங்கினார். மாணவர் திருச்செல்வன் நன்றி கூறினார்.