/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் முனைவோர் பட்டயபடிப்பு வாய்ப்பு
/
தொழில் முனைவோர் பட்டயபடிப்பு வாய்ப்பு
ADDED : மே 13, 2024 06:13 AM
மதுரை: தமிழக அரசு, அகமதாபாத்தில் இயங்கி வரும் இ.டி.ஐ.ஐ., என்ற நிறுவனத்துடன் இணைந்து, ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டய படிப்பு வழங்க உள்ளது.
சென்னை இ.டி.ஐ.ஐ., தலைமையகத்தில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ. ஒரு லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டய படிப்புக்கான பாடத்திட்டம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள், மாணவர்கள் தேர்ச்சி குறித்து அந் நிறுவனமே முடிவு செய்யும். ஆங்கில மொழியில் பயிற்சி இருக்கும் என்பதால், ஆங்கில புலமை இல்லாதோருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கும்.
21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளநிலை பட்டதாரிகள் சேரலாம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு உள்ஒதுக்கீடு செய்யப்படும். நுாறு சதவீதம் கல்வி உதவித் தொகை பெற வழி உள்ளது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பங்கு பெறலாம்.
இதுகுறித்த கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நாளை (மே 14) மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. கூடுதல் தலைமை செயலாளர் உமாசங்கர் இப்பயிற்சி குறித்து பேச உள்ளார். கலெக்டர் சங்கீதா, உயர்கல்வி நிறுவன பிரதிநிதிகள், குறு, சிறு தொழில் சங்கங்கள் உட்பட பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். தொழில் ஆர்வலர்கள் இதில் பங்கேற்கலாம்.