ADDED : ஆக 29, 2024 05:39 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கரும்பாலை பி.டி.காலனியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தொழில் முனைவோர் பயிற்சி நடந்தது.
சமுதாய வளர்ச்சி நிபுணர் லெஜீஸ் தலைமையில், சமுதாய வளர்ச்சி அலுவலர் பூமிகா முன்னிலையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொழில் துவங்குதல், முதலீடு செய்தல், கடன் பெறுதல், லாபம் ஈட்டுதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. 8 மாத பயிற்சிக்குப்பின் புதிய தொழில் துவங்க ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் முத்துக்குமார், ராஜஸ்ரீ, சண்முகப்பிரியா, அகிலா, வாரிய உதவி செயற்பொறியாளர் சங்கீதா, குடியிருப்போர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுசாமி பங்கேற்றனர்.
