ADDED : ஜூலை 02, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : மேக்கிழார்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தி.மு.க., சார்பில் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடந்தது.
உடற்கல்வி ஆசிரியர் பாண்டியராஜன் வரவேற்றார். தி.மு.க., வடக்கு ஒன்றியச்செயலாளர் அஜித்பாண்டி வழங்கினார். மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, நிர்வாகிகள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார் நன்றி கூறினார்.