ADDED : மார் 09, 2025 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் காந்திவேல் 34. கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் இருந்தார். இவரது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் ஒரு வாரம் பரோலில் வெளியே வந்தார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு சிறைக்கு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றவில்லை. கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மதுரையில் நண்பர்களை சந்திக்கச் சென்ற கைதியை போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.