ADDED : மார் 22, 2024 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை புதுவிளாங்குடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 6வது மாடியில் 'எக்ஸாஸ்ட்' பேன் உள்ள துவாரத்தில் 2 ஆண்டுகளாக ஆந்தை ஒன்று வசித்தது.
சில நாட்களாக துர்நாற்றம் வீச ஆரம்பித்ததால் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தல்லாகுளம் நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான வீரர்கள், துவாரத்தின் வழியாக நுழைந்து 20 அடி துாரத்தில் இருந்த ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இந்த ஆந்தை ஐரோப்பிய கண்டத்தில் காணப்படுபவை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

