/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
/
முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 06, 2025 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :மதுரை மாவட்ட முன்னாள் படைவீரர், அவரைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வேலைவாய்ப்பு கருத்தரங்கு கலெக்டர் அலுவலகத்தில் நாளை (மார்ச் 7) காலை 10:00 மணிக்கு தலைமையில் நடக்கிறது.
இதில் முன்னாள் படைவீரர் நலனுக்கான 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தின் கீழ், தொழில் துவங்க ரூ.ஒரு கோடி வரை வங்கி கடன் பெற வழிகாட்டப்படும். 55 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர் பயன்பெறலாம். மேலும் தங்கள் குறைகளை இரண்டு பிரதிகளில் மனுவாக நேரடியாக வழங்கி தீர்வு காணலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.