UPDATED : அக் 11, 2026 08:19 PM
ADDED : அக் 11, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான பட்டயம் மற்றும் தொழில் பயிற்சி நிலை தேர்வுகக்கான கணினி வழி தேர்வு நேற்று துவங்கியது.
மாநில அளவில் நடந்த இத்தேர்வில் மதுரையில் காமராஜ் பல்கலை, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, செந்தாமரைக் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி உட்பட 9 மையங்களில் நடந்தது. இத்தேர்வு நேற்று காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணிவரையும் நடந்தது.
காலை அமர்வில் 815 பேரும், மாலையில் 288 பேரும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் கணினியில் தேர்வு எழுதினர். இத்தேர்வு அக். 15 வரை நடக்க உள்ளது
