நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் அனைத்து துறை பணிநிறைவு அலுவலர்கள் ஆசிரியர்கள் சேவை மைய செயற்குழுக் கூட்டம் நடந்தது.
தலைவர் தமிழையா தலைமை வகித்தார். செயலாளர் ஸ்ரீகண்டன் மாதாந்திர, பொருளாளர் ஆதிசிவன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர். செயல்தலைவர் மணி, துணைத் தலைவர் சிதம்பரம் மைய செயல்பாடுகள், ஓய்வூதிய சலுகைகள் குறித்து பேசினர். நிர்வாகிகள் வீரணன், துரைபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.