ADDED : ஆக 25, 2024 04:51 AM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது. மாதாந்திர அறிக்கையை செயலாளர் ஸ்ரீகண்டனும், வரவு செலவு அறிக்கையை ஆதிசிவனும் வாசித்தனர்.
செயல்தலைவர் மணி, துணைத் தலைவர் சிதம்பரம், கவுரவ தலைவர் வீரணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை அரசு வழங்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
