ADDED : ஜூலை 23, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில், ரோட்டரி கிளப் ஆப் மதுரை எலைட் அமைப்பின் 2026–27ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் ரமணன் ஸ்ரீனிவாசன், உதவி மாவட்ட ஆளுநர் ஜெயகிரண் ஜெயின் முன்னிலை வகித்தனர்.
புதிய தலைவராக மணிகண்டன், செயலாளராக மகேஸ்வரன், பொருளாளராக பழனிகுமார் ஆகியோர் பதவியேற்றனர். மணிகண்டன் எழுதிய ‘தி புரொபஷனல் ஏலியன் சீரிஸ் – தி பிசினஸ் ஏலியன்’ என்ற நுாலை, கோபிசன் எம்.எல்.ஏ., வெளியிட்டார். 2027–28ம் ஆண்டுக்கான மாவட்ட ஆளுநர் லியோ பெலிக்ஸ் லுாயிஸ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் முதல் பிரதியை பெற்றனர்.
முன்னாள் தலைவர்கள் ராமராஜன், தினகரன், டாக்டர் முத்துக்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
