ADDED : ஜூலை 01, 2024 04:19 AM
மதுரை : ஓகா - மதுரை - ஓகா வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திங்கள்தோறும் இயக்கப்படும் இந்த ஓகா - மதுரை சிறப்பு ரயில் (எண் 09520) இன்று (ஜூலை 1) முதல் டிச. 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிதோறும் மதுரை - ஓகாவுக்கு செல்லும் சிறப்பு ரயில் (எண் 09519) வருகிற ஜூலை 5 முதல் அடுத்த ஆண்டு ஜன.3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் ஆறு மாதங்களில் 27 முறை பயணிக்கும்.
குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து திங்கள் இரவு 10:00 மணிக்கு புறப்பட்டு வியாழன் அதிகாலை 4:35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
அங்கு அதிகாலை 4:45 மணிக்கு புறப்பட்டு வியாழன் காலை 11:45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மதுரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1:15 மணிக்கு புறப்பட்டு காலை 6:25 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். அங்கிருந்து 6:35 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு காலை 10:20 மணிக்கு ஓகா சென்று சேரும்.