ADDED : ஜூலை 03, 2026 09:10 PM
அ நிறம் | அளவு
மதுரை: டி.கல்லுப்பட்டி ‘அட்மா’ திட்டம் சார்பில் பருத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் காரைக்கேணியில் நடந்தது.
வேளாண் உதவி இயக்குநர் விமலா முன்னிலை வகித்தார். பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட ரகங்கள், இனக்கவர்ச்சி பொறி, இயற்கை பூச்சிவிரட்டி தொழில்நுட்பம் குறித்து வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பேசினார். துறை சார்ந்த மானிய திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலர் சரவணகுமாரும் மண் மாதிரி சேகரிப்பு குறித்து உதவி வேளாண் அலுவலர் ராதாகிருஷ்ணனும் விளக்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஹேமலதா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரிமுத்து, துர்கா ஏற்பாடுகளை செய்தனர். 100 விவசாயிகள் பங்கேற்றனர்.
