/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்
/
உழவர் சந்தை ஊழியர்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 05:41 AM
மதுரை: தமிழ்நாடு உழவர் சந்தை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கமிஷனர் ஆபிரகாமிடம் மனு அளித்தனர்.
மாநில தலைவர் திராவிடமாரி தலைமையில் பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் ஈஸ்வரன், சாகுல்ஹமீது, கார்த்தான், சங்கர், லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மனுவில், ''மதுரை அண்ணாநகரில் தமிழகத்தின் முதல் உழவர் சந்தை 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதுவரை 181 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தலா 3 காவலர்கள், 1 துாய்மை பணியாளர் வீதம் ஒப்பந்த அடிப்படையில் அனைவருக்கும் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது.
இச்சம்பளத்தை ஒப்பந்த அடிப்படையில் இருந்து மாற்றி, தினக்கூலி அடிப்படையில் வேளாண் விற்பனைக் குழு மூலம் சம்பளமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

