ADDED : மே 09, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: கரட்டுப்பட்டியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம் வராததால் விவசாயிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மேல், கீழ்நாச்சிகுளம், கரட்டுப்பட்டியில் இருமாதங்களாக மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை 45 நாட்களாகியும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. ஆத்திரமுற்ற விவசாயிகள் சோழவந்தான் – பள்ளபட்டி ரோட்டில் அணைப்பட்டி பிரிவில் ஒருமணி நேரம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. போலீசார் சமரசம் செய்தனர்.
