ADDED : மே 22, 2026 09:23 PM
சோழவந்தான்: கரட்டுப்பட்டியில் கொள்முதல் செய்த நெல்லுக்கான பணம் வராததால் விவசாயிகள் ரோடு மறியல் செய்தனர்.
இங்கு மேல்,கீழ் நாச்சிகுளம், கரட்டுப்பட்டியில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் மையத்தின் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகின்றன. மேலும் 10 ஆயிரம் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் தேங்கியுள்ளன. நெல்லுக்கான பணமும் விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதிகாரிகளால் வழங்கப்பட்ட ரசீது மட்டுமே உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை இல்லாததால் சில நாட்களுக்கு முன்பு ரோடு மறியல் செய்தனர். அதிகாரிகள் போக்கு காட்டுவதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மீண்டும் சோழவந்தான் -– பள்ளப்பட்டி ரோட்டில் ஒரு மணி நேரம் மறியல் செய்தனர். போக்குவரத்து பாதித்தது. தாசில்தார் ராமச்சந்திரன் சமரசம் செய்தார்.
