ADDED : ஜூலை 22, 2026 06:52 PM
சோழவந்தான், ஜூலை 23-
கரட்டுப்பட்டியில் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக அரசு சார்பில் ரூ.75 ஆயிரம் உச்சவரம்புக்குள் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையாக தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இதற்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனை கண்டித்தும், சிறு,குறு விவசாயிகளுக்கான பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத் தலைவர் கார்த்திக்பாலு தலைமையில் ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அணைப்பட்டி பிரிவில் இருந்து கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம் பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
