/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்க்கரை ஆலையில் படப்பிடிப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் எதிர்ப்பு
/
சர்க்கரை ஆலையில் படப்பிடிப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் எதிர்ப்பு
சர்க்கரை ஆலையில் படப்பிடிப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் எதிர்ப்பு
சர்க்கரை ஆலையில் படப்பிடிப்பு : கலெக்டரிடம் விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 19, 2024 05:04 PM

மதுரை:அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தனர்.
சங்க மாநில துணைத்தலைவர் பழனிசாமி, விவசாயி மணி கூறியதாவது: சர்க்கரை ஆலையை திறக்க வேண்டுமென விவசாயிகள் போராடி வருகிறோம். ஆனால் இத்துறை கமிஷனர் சினிமா (தீரன் சூரன்) சூட்டிங் நடத்த அனுமதி தந்துள்ளார். ஆலையை திறக்க கமிஷனர் அக்கறை காட்டவில்லை. படக்குழுவினர் கொட்டகை அமைத்து உள்ளே சேதமாக்கி வருகின்றனர்.
ஏற்கனவே இங்கிருந்த நிறைய இயந்திரங்கள் காணாமல் போய்விட்டன. ரூ.பல கோடி மதிப்பில் இன்னமும் நிறைய இயந்திரங்கள் உள்ளன. படக்குழுவை தொடர்ந்து அனுமதித்தால் சூட்டிங் முடிந்து செல்லும் போது இயந்திரங்களை கொண்டு சென்றால் கூட யாருக்கும் தெரியாது. சர்க்கரை ஆலையில் நிறைய மூங்கில் கம்புகள், மற்ற பொருட்களையும் படப்பிடிப்புக்கு பயன்படுத்துகின்றனர். அங்குள்ள பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. இனிமேலும் படப்பிடிப்பு நடந்தால் விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்றனர்.