நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா மைக்குடி, விடத்தகுளம், உலகாணி பகுதிகளில் தோட்டங்கள், வயல்கள் உள்ளன.
இரவில் ஆள் இல்லாத தோட்டங்களில் மோட்டார், மின் வயர்களை மர்மநபர்கள் வெட்டி திருடிச்செல்கின்றனர். ஏற்கனவே விவசாயத்தால் போதிய வருமானமின்றி தவிக்கும் விவசாயிகள் இதுபோன்ற திருட்டால் புதிதாக வயர்கள், மோட்டார்களை வாங்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசார் கண்காணித்து திருட்டை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.