ADDED : ஜூன் 13, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கொட்டகுடியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன், அலுவலர் கவிதா, துணை வேளாண் அலுவலர் பாஸ்கரன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராபின், உதவி அலுவலர் சிவரஞ்சனி பங்கேற்றனர். பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உர மேலாண்மை குறித்த தொழில் நுட்பங்கள், அடையாள எண் பதிவது, மண் மாதிரி எடுக்கும் வழிமுறைகள், அதிக மகசூல் தரும் ரகங்களை கண்டறிவது குறித்து பயிற்சி அளித்தனர்.
