ADDED : மே 28, 2024 03:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் முருகன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி, பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட விரோதமாக முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்ட திட்டமிடும் கேரளா அரசை கண்டித்து மே 30 மேலுாரில் விவசாயிகள், வர்த்தக சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.