ADDED : செப் 14, 2024 05:05 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டி எம்.ஆர். நகர் சுமதி 40. திருப்பரங்குன்றத்தில் தபால் ஊழியராக பணியாற்றினார். நேற்று முன்தினம்
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர் சோகத்துடன் இருந்தார். கணவர் விக்னேஷ்குமார் விசாரித்தபோது அலுவலகத்தில் பணி தொடர்பாக கடிதம் எழுதி வாங்கியுள்ளார்கள் என அழுதுள்ளார். நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
