/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சூரப்பட்டி பள்ளியில் படமெடுக்கும் பாம்புகள்
/
சூரப்பட்டி பள்ளியில் படமெடுக்கும் பாம்புகள்
ADDED : டிச 09, 2024 05:35 AM

கொட்டாம்பட்டி: சூரப்பட்டி ஊராட்சிஅரசு உயர்நிலைப்பள்ளி 2018ம் ஆண்டு ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து. 81 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இப்பள்ளியில் சூரப்பட்டி, புளியமங்கலம், புதுார் பொட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளியை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுவதால் விஷப் பூச்சிகள், பாம்புகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து படமெடுத்து ஆடுகிறது. மாணவர்கள் அச்சத்துடனே பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. காம்பவுண்ட் சுவர் கட்ட வலியுறுத்தி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். இருப்பினும் சுற்றுச்சுவர் கட்டவில்லை என்பது பெற்றோர்களின் குற்றச்சாட்டு. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.