ADDED : ஜூன் 24, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கலாமுர்மு 49.
இவர் துாத்துக்குடியில் கட்டட வேலை பார்த்தார். சொந்த ஊருக்கு சென்றுவிட்டு ரயிலில் துாத்துக்குடி திரும்பும் வழியில் மதுரை அருகே தவறி கீழே விழுந்ததில் இரு கால்களும் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். உறவினருடன் சொந்த ஊர் திரும்ப பண வசதி இல்லாததை அறிந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் பயணச் செலவு, மருத்துவ செலவிற்கு நிதி உதவி வழங்கினார்.
