ADDED : ஜூலை 31, 2026 06:20 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியின் குப்பை ஏற்றிச் செல்லும் மினிவேன் பழுதடைந்து 2 ஆண்டுகளாக உசிலம்பட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. நகராட்சியின் குப்பை வாகனங்களில் அதிகமான குப்பை சேர்ந்தால், நின்று கொண்டிருக்கும் இந்த வாகனத்தில் இறக்கி வைத்து பின்னர் எடுத்துச் செல்வர்.
நேற்று மாலை 5.00 மணிக்கு இந்த பழுதடைந்த லோடுவேனில் வைத்திருந்த குப்பையில் திடீர் எனத் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படை வந்து தீயை அணைத்தது. நகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
