தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதலாமாண்டு துவக்க விழா..

முதலாமாண்டு துவக்க விழா..

முதலாமாண்டு துவக்க விழா..


ADDED : செப் 14, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 05:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: உங்களை வேலைக்கு அனுப்பாமல் தாங்கள் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று கல்லுாரியில் படிப்பதற்கு பெற்றோர் சேர்த்து இருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கஷ்டப்படுவதற்கான பலனை நீங்கள் முழுமையான பெற வேண்டும் என நினைக்கின்றனர்.

உங்களுக்கு நல்ல கல்வி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த பெற்றோருக்கு நன்றி சொல்ல பழகுங்கள். நீங்கள் பொறியியல் படித்து முடிக்கும் போது ஒரே ஒரு தேர்வு எழுதினால் போதும். உங்களுக்கான ஐ.ஏ.எஸ்., படிப்பு செலவை அரசே ஏற்கும். பல நல்ல வாய்ப்புகள் காத்து கொண்டிருக்கின்றன, என்றார்.

முதலாம் ஆண்டு மாணவர்களையும், பெற்றோரையும் கல்லுாரி செயலாளர் தர்மராஜன் வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ராமசாமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

முதல்வர் செந்தில் நன்றி கூறினார். கல்லுாரி துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us