நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா குராயூர் பெரிய கண்மாயில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீன்பிடித் திருவிழாவில் கிராம மக்கள் உற்சாகத்துடன் மீன்களைப் பிடித்துச் சென்றனர்.
இங்குள்ள கண்மாய் தண்ணீரின்றி வறண்டது. தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. கிராமத்தினர் மீன் பிடி திருவிழாவுக்கு தயாராகினர்.
நேற்று மீன்பிடித் திருவிழாவில் குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குறவை, கெளுத்தி, கட்லா, கெண்டை உள்பட பல்வேறு வகை மீன்களை பிடித்துச் சென்றனர்.
கிராமத்தினர் கூறுகையில், ''மீன்கள் நான்கு முதல் ஐந்து கிலோ வரை இருந்தன. மீன்கள் அதிக அளவில் கிடைத்தன'' என்றனர்.