ADDED : ஏப் 12, 2024 05:13 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று (ஏப்.,12) காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் நடக்கும். முக்கிய நிகழ்வாக ஏப்.,19 பட்டாபிஷேகம், 20 திக்கு விஜயம், 21 காலை 11:05 மணி முதல் 11:20க்குள் திருக்கல்யாணம், அன்று மாலை 6:00 மணிக்கு ஊஞ்சலாட்டு அலங்காரம், 22ல் தேரோட்டம் நடக்கிறது.
