ADDED : ஜூலை 14, 2026 07:01 PM
மதுரை: மத்திய அரசின் சிறுபான்மை நல மேம்பாட்டுத் துறை சார்பில் மதுரை வேளாண் கல்லுாரி தோட்டக்கலைத் துறையில் மலரியல் வித்தகர் படிப்பிற்கு 5 மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என டீன் சந்திரமணி தெரிவித்தார்.
நிலம், அலங்காரச் செடிகள், நாற்றங்கால் பராமரித்தல் பயிற்சி, நாற்றுகள் உருவாக்குதல், நடவு, பராமரிப்பு, மலர் அறுவடை, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம், மலர் பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கு பின் நர்சரி அமைக்கலாம், மலர் சாகுபடி தொடங்கலாம்.
14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், மாற்றுத்திறனாளிகள் பயிற்சியில் பங்கேற்கலாம். மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உண்டு. உண்டு உறைவிட வசதியில்லை. பங்கேற்பாளர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சிக்கு பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என்றார். தொடர்புக்கு:75980 36802.
