ADDED : மே 30, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில், வைகாசி விசாக பால்குடம் எடுத்துச் சென்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தென்மண்டல தலைவர் அமுதன், மாவட்ட பொருளாளர் கோதண்டராமன் முன்னிலையில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. கிளைத் துணைத் தலைவர் ஜெகன்நாதன், பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சுப்பிரமணியன், முன்னாள் நிர்வாகிகள் பிச்சுமணி, பக்தவத்சலம், மகளிரணி செயலாளர் ராஜம் மீனாட்சி, இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா, ஆலோசகர்கள் கல்யாணி, வெங்கட்ராமன், செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
