/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல் விதிமுறையால் பணம் பறிமுதல்; வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை
/
தேர்தல் விதிமுறையால் பணம் பறிமுதல்; வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை
தேர்தல் விதிமுறையால் பணம் பறிமுதல்; வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை
தேர்தல் விதிமுறையால் பணம் பறிமுதல்; வியாபாரிகள் சங்கத்தினர் வேதனை
ADDED : மார் 29, 2024 06:21 AM
மதுரை : சிறு வணிகர்கள், தெருவோர கடை நடத்துபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், திருமணத்திற்கு செல்பவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்வதை நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: தேர்தல் அதிகாரிகளின் பணம் பறிமுதல் நடவடிக்கையால் சிறிய முதலீட்டில் அன்றாடம் பொருட்களை வாங்கி வணிகம் செய்யும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர கடை நடத்துவோரின் வாழ்வாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்படும் பணம் மாவட்ட கருவூலகத்தில் செலுத்தப்பட்டு விடுவதால் அங்கிருந்து திரும்பப் பெறுவதற்கு காலதாமதமாகிறது. இதனால் வணிகத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிறு வணிகர் மற்றும் தயாரிப்பாளர் தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்திற்கு தகுந்த விளக்கம் அளித்தால் அந்த பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கப்படும் வரை நேர்மையாக பணம் எடுத்துச் செல்லும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர கடை வைத்திருப்பவர்கள் சுற்றுலா பயணிகளிடம் இருந்து நியாயமான பணத்தை பறிமுதல் செய்வதை உடனடியாக நிறுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும் என்றனர்.

