ADDED : ஜூலை 31, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : வடுகபட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லப்பாண்டி 60. இங்குள்ள உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதடைந்துள்ளது.
மின்துறை பணியாளர்கள் வருவதற்கு முன் தானே ஏறி பியூஸ் போட முயன்ற போது எதிர்பாராத விதம் மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

