/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நாற்பதும் அ.தி.மு.க.,வுக்கே செங்கோட்டையன் நம்பிக்கை
/
நாற்பதும் அ.தி.மு.க.,வுக்கே செங்கோட்டையன் நம்பிக்கை
நாற்பதும் அ.தி.மு.க.,வுக்கே செங்கோட்டையன் நம்பிக்கை
நாற்பதும் அ.தி.மு.க.,வுக்கே செங்கோட்டையன் நம்பிக்கை
ADDED : மே 04, 2024 05:28 AM
பேரையூர்: 'லோக்சபா தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'' என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது இல்ல திருமண விழா அழைப்பிதழை முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க நேற்று டி குன்னத்துார் வந்தார். குன்னத்துார் அம்மா கோயிலில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து பத்திரிகை வைத்து வழிபட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எங்கள் தொகுதியில் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். தொண்டர்கள் கடுமையாக பணியாற்றிய உள்ளனர். மக்களின் மனநிலை நுாறு சதவீதம் மாற்றம் அடைந்துள்ளது. அந்த மாற்றத்தை நாங்கள் அறுவடை செய்ய உள்ளோம்.
தமிழகம், புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெறும். இந்த வெற்றி 2026 இல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு அடித்தளமாக அமையும் என்றார்.